இலங்கை தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இன்று தெரிவித்தது.
ஒக்டோபரில் 70.6 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை , நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 33.9 சதவீதமாகவும் உணவு அல்லாத பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் பணவீக்கம் 31.0 சதவீதமாகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.