மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் வர்த்தகர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு உளவு பார்த்ததாக பொலிஸார் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மிளகாய் தூள் வியாபாரம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் இம்புல்கம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸார் முன்னதாக கைது செய்திருந்தனர்.