அனுராதபுர மாவட்டம் – மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் நேற்றைய தினம் (03-08-2023) துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பௌத்த மதத்தை ஸ்தாபித்த மையமாகவும், ஸ்ரீ மஹா போ சமிதுன் வரலாற்று புனித இடமாகவும் விளங்கிய மிஹிந்தலை புனித பூமியில் நேற்று (3) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.