இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இலங்கையில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், குறித்த கோரிக்கை ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் , நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 – 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 – 2 மணித்தியாலங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.