சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரியை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் என்பனவற்றுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.