மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆசிய பிராந்தியத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் மற்றும் இலங்கையில் உள்ள முகவர் நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இந்தக் கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (08) இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மின் உற்பத்தி அமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவாகச் சேர்ப்பதற்கு தேவையான ஆதரவைப் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.