2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
* புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது…
* அரச நிறுவனங்களின் தொலைப்பேசி செலவீனங்கள் நூற்றுக்கு 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது…
* பாராளுமன்ற ஓய்வூதியம் கிடைக்கப்பெற வேண்டுமாயின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக 10 வருடங்கள் கடமையாற்றி இருக்க வேண்டும்… இதில் ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.
* அரச உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் மானியம் 5 லீற்றரால் குறைப்பு..
* மின்சார கட்டணம் 10 சதவீதம் குறைப்பு
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிகழ்வுகள் பாராளுமன்றத்தில் இருந்து நேரடியாக தெரண தொலைக்காட்சி மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாக உங்களுக்கு பார்வையிடலாம்.