மாற்றுத்திறனாளிகளுக்கான பொருட்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய வரிக் கொள்கையினால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் அசாதாரணமாக 400% அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் நாங்கள் எந்தவொரு வரியையும் அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.