மார்ச் மாதத்துக்கான எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி மாதாந்த விலை சூத்திரத்தின்படி, திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (29) இரவு அறிவிக்கப்பட இருந்தது.
இந்நிலையில் , இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையை ஏற்கனவே இருந்த விலையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
அதேசமயம் , லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகியவை மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலையில் திருத்தம் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.