நாட்டில் பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (19-08-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர்.
இந்த நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.