தேசிய சபை நாளை மறுதினம்(29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.