நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளதார நெருக்கடியில், விஷ எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையினால் மூன்றரை வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
“பற்றாக்குறை இருப்பதாக வெளியான அறிக்கைகளுக்கு மாறாக, ஆறு மாதங்களுக்கு விஷ எதிர்ப்பு மருந்துகள் இருப்பில் உள்ளதால் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
உயிரிழந்த குழந்தைக்கு பெரும்பாலான மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்ததாகவும், . எனவே, மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் விஷத்திற்கு எதிரான சிகிச்சையை வழங்குவதற்கு முன்னர் குழந்தையின் அனாபிலாக்ஸஸ் நிலைமைக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் பற்றாக்குறையாக இருந்த குளோர்பெனமைன் ஊசி மருந்தை தனியாரிடமிருந்து வாங்குவதற்காக அதிகாரி ஒருவர் மருந்து சிட்டை எழுதிக் கொடுத்தார்.
எனினும் , தனியார் மருந்தகங்களில் கூட மருந்து கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், சம்பவம் குறித்து சுகாதார அமைச்சகத்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.