அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனை மரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே பொன்னாலை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்த நிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்