யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு அன்டர்சன் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கமலாதேவி அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா தர்மலிங்கம்(மகேந்திரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, கோபாலபிள்ளை மற்றும் துரைராசா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பிரபலாதன்(தரன்- சுவிஸ்), வசீகரன்(பவான் -சுவிஸ்), சசிகலா(பாமா- பிரான்ஸ்), ஜீவகரன்(ஜீவன்-பிரான்ஸ்), மதிகரன் மதி-பிரான்ஸ்), சத்தியகலா(பாமினி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தமலர்(மலர்- சுவிஸ்), கிருஷ்ணலதா(செட்டி-சுவிஸ்), பேரின்பநாயகம்(பேரின் -பிரான்ஸ்), லாவண்யா(யது-பிரான்ஸ்), லோஜினி(பிருந்தா-பிரான்ஸ்), சுதர்சன்(சுதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
பிரவீன்(சுவிஸ்), பிரவீனா(சுவிஸ்), வகிஷா(சுவிஸ்), ஹரிஷன்(சுவிஸ்), அரிஷன்(சுவிஸ்), சகிஷன்(பிரான்ஸ்), அகிஷன்(பிரான்ஸ்), சஹானா(பிரான்ஸ்), அக்சய்(பிரான்ஸ்), அபிர்னா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஐஸ்வர்யா(பிரான்ஸ்), ஐங்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற சாந்தகுமாரி மற்றும் ஜெயக்குமார், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் கமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் 04-04-2023 செவ்வாய்க்கிழமை முதல் 06-04-2023 வியாழக்கிழமை வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.