தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தலை மன்னார் பகுதியில் அண்மையில் 09 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை (03) குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்.