மன்னார்-கீரி பகுதியில் இறைச்சிக்காக கொண்டு சென்ற கடலாமையுடன்2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு உயிருடன் மீட்கப்பட்ட கடலாமை 35 கிலோ எடை கொண்டது என தெரிய வருகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட கடலாமை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்