தம்புள்ளை – வேவலவெவ பகுதியில் வீடொன்றில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் (27-02-2024) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, உயிரிழந்தவர் 45 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.