நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லை, எஹலியகொட, குருவிட்ட, இம்புல்பே, எலபாத்த, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேகாலை மாவட்டத்தில் அரனாயக்க, தெரணியகல, தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும் இந்த ஆபத்தான பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஏற்கனவே இப்பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறித்தியுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.