மட்டக்களப்பு நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் நீர்நிலை ஒன்றிலிருந்து நேற்று புதன்கிழமை (25) இரவு சடலம் மீட்கபட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலம் காணப்பட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை அவதானித்ததை தொடர்ந்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதியின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவ்விடத்துக்கு வருகை தந்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதியின் முன்னிலையில் சடலம் நீர் நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் போரதீவுப்பற்றுப் பிரதேச செலயகத்துக்குட்பட்ட பொறுகாமம் சமூர்த்தி வங்கியில் கடமை புரியும் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த நிலக்சன் என்பவரே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.