மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது.
இவை அகற்றப்பட்டுள்ளதாக இன்று (வியாழக்கிழமை) ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாட்டுக் குழுவினர் அதிருப்தி
குறித்த இடத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினர் சென்று பார்த்தபோது அவை கிழித்து அகற்றப்பட்டுள்ளதுடன் கயிறுகள் மாத்திரம் உள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏற்பாட்டுக் குழுவினர் தங்களது அதிருப்தியினையும் கவலையினையும் வெளியிட்டனர்.
அதேவேளை நேற்று முன்தினம் திகதியன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நினைவேந்தல் பதாதை இதேபோன்று இனம் தெரியாதோரால் அகற்றப்பட்டிருந்ததமை குறிப்பிடதக்கது.