மட்டக்களப்பு வயல் வேலைக்குச் சென்ற நபரொருவர் வெள்ளிக்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை – ஆத்துச்சேனை எனும் வயல் பகுதியில் வைத்து இடம்பெறுள்ளது.
ரிதிதென்னை பகுதியைச் சேர்ந்த அபுல் எனுப்படும் நபர் ஒருவரே இவ்வாறு வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மரணத்துக்கான காரணத்தை கண்டறிய உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.