மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய அலியார் அப்துல் ஹமீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் காணி ஒன்றின் மருமகன் மற்றம் தாயின் சகோதரரான மாமனாருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாமனாரை கூரிய ஆயதத்தால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மருமகன் அந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.