அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்று வரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் 100வது நாள் இன்றாகும்.
இந்நிலையில் குறித்த போராட்டத்தின் 100 வது நாளை எட்டியதற்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூலில் குறித்த தன்னெழுச்சி போராட்டத்திற்கு வெற்றி என பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தவறவிடாமல் 100. வெற்றி வெற்றி வெற்றி வெற்றி !மக்கள் போராட்டத்திற்கு வெற்றி !!19+,19 ஐ கடந்து சர்வாதிகார செயல் தலைவர் அதிகாரங்களை ஒழிப்போம் !!!என குறிப்பிட்டுள்ளார்.