எனது மகள் உண்ணாமல் இருக்கிறாள் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என புதிய விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி நாடாளுமன்றக் குழு அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக மாறத் தீர்மானித்த போதிலும், சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.