சேலம் மாட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனது மகனை 8 ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக 40 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளார்.
அப்போது சிறுவனை அறையை விட்டு வெளியே அனுப்பிய தலைமை ஆசிரியர் பழனிசாமி (57) தாயிடம் ஆபாசமாக பேசி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆசைக்கு இணங்கினால் மகனுக்கு சீட்டு தருவதாக கூறி ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அறையை விட்டு வெளியேறி தனது உறவினர்களிடம் இதை குறித்து தெரிவித்துள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்த்துறை மற்றும் வட்டார கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் மக்கள் களைந்து சென்றனர்.
தலைமை ஆசிரியர் தன் சொந்த செலவில் தன்னுடைய அறையில் சன் கன்ட்ரோல் பிலிம் ஒட்டிய கருப்பு கண்ணாடியை அமைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் அந்த தலைமை ஆசிரியர் காடையாம்பாட்டி, ராமமூர்த்தி நகர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.