தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் எட்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் விஜித் குணசேகர நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற இம்யூனோ குளோபுலின் (immunoglobulin) இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விஜித் குணசேகர சர்ச்சைக்கு உட்பட்டிருந்தார்.
இதனையடுத்து விஜித் குணசேகரவுக்கும், சுகாதார அமைச்சின் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்டோருக்கும் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.