சேலத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட நபர் ஜாமீன் கிடைக்காத விரக்தியில் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த அசோக் குமார், சேலத்தில் அம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றிவந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் அடிப்படியில் அசோக் குமார் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்குப் பின், அசோக் குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனையடுத்து, பலமுறை முயற்சி செய்தும் கடந்த 8 மாதங்களாக அசோக் குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் நேற்று நள்ளிரவு சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், விரக்தியடைந்த அசோக் குமார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தகொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அசோக் குமாரின் தற்கொலை குறித்து வழக்குப்பத்திவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.