கர்நாடகாவில் போக்குவரத்து காவலரிடம் பிடிபட்ட பெண், அ பரா தம் செலுத்த பணம் இல்லாததால் தனது தாலியை கழட்டிக்கொடுத்த சம்பவம் நிகழ்ந்தது.
பெல்காவி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாரதி விபூதி என்ற பெண், தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ஹெல்மெட் போடாததால் பாரதியின் கணவரை பிடித்த போக்குவரத்து காவல்துறையினர், 500 ரூபாய் அ ப ராதம் விதித்தனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கணவரை மீட்கவேண்டும் என்பதற்காக பாரதி, தனது தாலியை கழட்டி போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார்.
தர்மசங்கடத்துக்குள்ளான போலீசார் மூத்த அதிகாரிகளின் அறிவுரைக்கு பின் தாலியை பாரதியிடமே ஒப்படைத்தனர்.