பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் கணவன், மனைவி கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கணவன் மற்றும் மனைவி ஆகியோர் வழக்கு ஒன்று தொடர்பாக களுத்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். அங்குக் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவி அணிந்திருக்கும் உடை நீதிமன்றத்துக்குப் பொருத்தமற்றது எனக் கூறியுள்ளார்.
இதன்போது, இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் கணவன் மற்றும் மனைவி பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கணவனும் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.