நாரம்மல – ரன்முத்துகல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையிடச் சென்ற சந்தேகநபர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Online ஊடாக தொலைபேசிகளை விற்பனை செய்வதாகக் கூறி போலியான வர்த்தகத்தை முன்னெடுத்துள்ள குறித்த சந்தேகநபர், தன்னை சந்திக்க வந்த வாடிக்கையாளரிடம் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 28 வயதான சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.