முல்லேரியா பகுதியில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸார் போன்று வேடமிட்டு குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 42 வயதுடைய தன்திரிகே நுவன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணிக்கும் விதம் அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.