இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக மற்றொரு குழு வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு செல்வதற்கு முன்னர் நாட்டில் உள்ள தமது சொத்துக்களை விற்க முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அந்த சொத்துக்களை கொள்வனவு செய்ய யாரும் முன்வராததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்லும் பயணத்தை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது..