இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாவுள்ள நிலையில் பிரச்சாரங்கள் மும்மரமாக இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கு செலவழிக்கக்கூடிய பணத்தை விட அதிகமான பணத்தை வேட்பாளர் ஒருவர் செலவிட்டதாக நீதிமன்ற விசாரணையில் தெளிவான தகவல் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் குடிமை உரிமைகள் மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் வரலாற்றில் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது பதவியை இழக்கும் வகையில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு விபரங்கள் தேர்தலின் பின்னர் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் செலவு விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல்களாகவோ இருந்தால், காவல்துறையில் புகார் அளிக்கவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் சட்டப்படி அனுமதி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .