போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை முதற்கட்டமாக, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கைதுசெய்யப்படும் நிலையில், எதிர்காலத்தில், போதைப்பொருள் பயன்படுத்தும் வாகன சாரதிகளை கைது செய்ய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.