பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.