பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று இரவு பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் சந்தேகநபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.