நேற்று வந்த பெற்றோல் கப்பலுடன் மற்றுமொரு கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் , 10 நாட்களுக்கு முன்னர் வந்த மற்றுமொரு டீசல் கப்பலுக்கு அடுத்த வாரத்தில் பணம் செலுத்தவுள்ளதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த 20ஆம் திகதி நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணத்தை புதிய முறையின் கீழ் செலுத்துவதற்கு மேலதிக திட்டங்களை வகுத்துள்ளதாகவும் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.