மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் உள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக் கொள்ளுமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.