குளியாப்பிட்டிய பாடசாலை ஒன்றில் அதிபர் மற்றும் ஆசிரியை நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (11ம் திகதி) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் சிறிய தந்தையும் அவரது மனைவியும் ஏதோ காரணத்திற்காக அதிபரை சந்திக்க வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் அறையில் கலந்துரையாடி கொண்டிருந்த போது சிறிய தந்தை தான் வைத்திருந்த தலைகவசத்தால் அதிபரை சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலை தடுப்பதற்காக பாடசாலையின் ஆசிரியை ஒருவர் முற்பட்ட போது அவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் அதிபரும் ஆசிரியையும் குளியாப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.