பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 160 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றமையே வெங்காயத்தின் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.