கொஹுவல பிரதேசத்தில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கையை வெட்டி காயப்படுத்தி கைப்பையை கொள்ளையிட்டுச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைப்பையில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான கைபேசியும், வங்கிப் புத்தகங்கள், கடனட்டைகள் மற்றும் 10,000 ரூபா பணமும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொள்ளை சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ – வெரஹேரவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த கைப்பை வெலிபார பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.