இந்த மாதத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் ஆறு நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் தற்போது புத்தளம் கடல் எல்லைக்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொசாம்பிக் நாட்டில் இருந்து கொண்டுவரப்படும் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி இந்தக்கப்பலில் ஏற்றிவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிரக்கறி 14 மில்லியன் டொலர் பெறுமதியை கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்றைய தினம் கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.