புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுவதை அவரது நண்பி தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நண்பி கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
புகையிரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் புகையிரதத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
புதரில் விழுந்ததால் சீன யுவதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.