பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டதன், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.
அதேவேளை பண நன்கொடைகள் தவிர, பிரியந்தவின் பிள்ளைகளில் ஒருவரின் கல்விக்காக மடிக்கணினி ஒன்றையும் சஜித் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.