பிரித்தானியாவிலிருந்து MIS-C என்னும் புதிய வகையான நோய் ஒன்று தற்போது இலங்கையில் பரவி வருகிறது.
இதயம்,நுரையீரல்,சிறுநீரகம், மூளை, தோல், கண்கள், மற்றும் ஏனைய உறுப்புகளை வீக்கமடைய செய்யும் கொடிய நோய் தான் இந்த MIS-C என்னும் நோய். இலங்கையில் தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஐக்கிய ராஜ்யத்தில் கண்டறியப்பட்ட இந்த நோயானது, ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் கண்டறியப்பட்டது.
இந்த நோய் குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியதாவது, MIS-C நோயானது 19 வயது வைரையிலான பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிந்தைய கலகட்டமான 2 முதல் 6 வாரங்களுக்குள் இந்த தொற்று ஏற்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிள்ளைகளுக்கு தொற்று அறிகுறி தென்பட்டால் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.