பிரான்சில் கலவரங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிசின் மேயரின் வீட்டின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள மேயரின் வீட்டை தீக்கிரையாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடிய மேயர் குடும்பத்தினர் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் .
இது ஒரு கொலை முயற்சி என கருதப்படுவதுடன் பிரதமர் எலிசபெத் போர்னே இது சகித்துக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார்.
தாக்குதல் இடம்பெற்றவேளை மேயர் வின்சென்ட்ஜீன்பிரம் வீட்டில் இருக்கவில்லை என கூறப்படும் அதேசமயம், அவரது மனைவியின் கால்முறிந்துள்ளதாகவும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை ஆபிரிக்க பதின்மவயது இளைஞனை பொலிஸார் கொலை செய்த பின்னர் பிரான்சில் வன்முறைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் நான் எனது அலுவலகத்திலிருந்து நகரின் நிலைமையை அவதானித்துக்கொண்டிருந்தவேளை எனது வீடு தாக்கப்பட்டது என மேயர் தெரிவித்துள்ளார்.
கலக்காரர்கள் வீட்டையும் எரிப்பதே அவர்களின் நோக்கம் என மேயர் தெரிவித்துள்ளார். எனது மனைவி ஏழு மற்றும் ஐந்துவயது பிள்ளைகளுடன் தப்பியோடமுயன்றவேளை பட்டாசுகள் போன்றவற்றை பயன்படுத்தி கலக்கராரகள் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு இது கொலைமுயற்சி என சாடிய மேயர், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத கோழைத்தனம் எனவும் தெரிவித்துள்ளார்.