பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை மட்டும் கொரோனாவால் 20,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று16,546 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,465,163 ஆக உயர்வடைந்ததுடன், தொற்று வீதம் 6.1 சதவீதத்தில் இருந்து 6.0 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
மேலும், கடந்த ஏழு நாட்களில் 9,921 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,763 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டில், நாள் ஒன்றில் பதிவாகும் குறைந்தபட்ச பலி எண்ணிக்கையாக ஞாயிற்றுக் கிழமை பதிவாகியுள்ளது.
167 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை81,814-ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 57,815 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.