பிக்கு ஒருவர் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இங்கிரிய பிரதேச பௌத்த விவகாரை இணைப்பாளர் என தெரியவந்துள்ளது.
இதனை புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்குவிடம் இருந்து 40 மில்லி கிராம் போதைப் பொடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரைகளில் நடமாடிய திருடர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தெரணமவிடம் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை வெளிக்கொணர நீண்ட நேரம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
புலத்சிங்கள பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்