பால் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் மூலம் பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“அத்தோடு நாட்டில் பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாய அமைச்சுக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வலுவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பால் மற்றும் புரதத் தேவைகளை முதன்மையாகப் பூர்த்தி செய்வதே தமது நோக்கமாகும்” எனவும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.