வெளிநாட்டிலுள்ள தேடப்படும் பாதாள உலகக் குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளிகள்
தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் டுபாயில் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஒப்படைப்பு சட்டங்கள் பயன்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இவ்வாறு தேடப்படுபவர்களில் ஹரக் கட்டா, கணேமுல்லே சஞ்சீவ, குடு தர்மே போன்ற பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும் அடங்குவர் எனவும் அவர் கூறினார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை
அத்துடன் அவர்களை நாடு கடத்துவதற்கு ஒப்படைப்பு ஆவணங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.